அப்போது வாகனத்தில் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று புகை வந்த நிலையில், தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய துவங்கியது. இதனால் டிரைவர் வாகனத்தைவிட்டுவிட்டு இறங்கி ஓடியதால் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மணலி, மாதவரம் பகுதிகளில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமாகியது. இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.
The post மாதவரம் 200 அடி சாலையில் சாலையை தூய்மைப்படுத்தும் வாகனம் தீப்பிடித்து எரிந்தது: டிரைவர் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.
