பரனூர் சுங்கசாவடியை மூட வலியுறுத்தி இடதுசாரி இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி இடதுசாரி இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் சட்டவிதிக்கு மாறாக செயல்படும் செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியை மூட வலியுறுத்தி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் இடதுசாரி இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள சுங்கசாவடி, தொழுப்பேடு சுங்கசாவடியிலிருந்து விதிகளுக்கு மாறாக 60 கிலோ மீட்டருக்குள் உள்ளாகவே அமைந்துள்ளது. 2019ம் ஆண்டிலேயே ஒப்பந்தம் காலாவதியாகியுள்ளது. இதனை அகற்றக்கோரி தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது, மத்திய தனிக்கை துறை அறிக்கையிலேயே சட்ட விரோதமாக ₹28 கோடி வசூலித்துள்ளதாக ஆதரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அப்பாவி வாகன ஓட்டிகள் பல ஆயிரம் பேரிடமிருந்து சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் பரனூர் சுங்கசாவடியை அகற்ற தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இடதுசாரி இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

The post பரனூர் சுங்கசாவடியை மூட வலியுறுத்தி இடதுசாரி இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: