சரோஜா மற்றும் சபிமோள் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக தெரிகிறது.
அப்போது பேச்சுவார்த்தை நடத்த வந்த ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர், சரோஜாவின் வயிற்றில் காலால் எட்டி உதைத்தார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சரோஜா காயம் அடைந்தார். இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதை அறிந்த சாவர்க்கர் மற்றும் சசிகுமார் ஆகியோர் அங்கிருந்து சென்று விட்டனர். காயமடைந்த சரோஜாவை மீட்டு அவரது உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சம்பவம் குறித்து சரோஜா களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சபிமோள், சசிகுமார், சாவர்க்கர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல் சபிமோள் தரப்பிலும், சரோஜா தன்னை தாக்கி விட்டதாக புகார் செய்யப்பட்டது. அந்த புகாரையும் பெற்றுக்கொண்ட போலீசார் சரோஜா மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், பாஜ கவுன்சிலர் சாவர்க்கர் சரோஜாவின் வயிற்றில் காலால் எட்டி உதைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வாட்ஸ் ஆப் உள்பட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
The post குமரியில் பரபரப்பு: பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த பா.ஜ கவுன்சிலர் appeared first on Dinakaran.
