உத்தரபிரதேசத்தில் நடந்த கொடுமை தாயை தெருவில் இழுத்து சென்ற மகன்: வீடியோ வைரலால் போலீஸ் விசாரணை

பாக்பத்: உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது தாயை தெருவில் இழுத்து சென்ற வீடியோ வைரலானதால், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் குஹர் கிஷன்பூர் பரல் கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது வயதான தாயை தெருவில் இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட தாய் தனது மகனிடம் பலமுறை கெஞ்சுவதைக் காணமுடிகிறது. ஆனால் அந்த நபர் பெற்ற தாயை தரதரவென்று இழுத்து செல்கிறார். அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த நபரை தடுக்க முயன்றனர். ஆனாலும் அவர் யாருடைய கோரிக்கையும் ஏற்காமல் இழுத்து சென்றார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இந்த சம்பவம் குறித்து ஷிவ்தத் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘தாயை மகன் தெருவில் இழுத்து சென்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினர். ஆனால் சமூக வலைதளங்களின் தாயை தெருவில் இழுத்து சென்ற மகனை பலரும் கண்டித்து விமர்சித்து வருகின்றனர்.

The post உத்தரபிரதேசத்தில் நடந்த கொடுமை தாயை தெருவில் இழுத்து சென்ற மகன்: வீடியோ வைரலால் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: