கக்கன் வாழ்க்கை வரலாறு திரைப்பட சிறப்பு காட்சி: காவல்துறை சிறுவர், சிறுமியர் மன்றத்தினர் பார்வையிட்டனர்

சென்னை: சென்னை காவல் துறையில் உள்ள சிறுவர், சிறுமியர் மன்றங்களுக்கு கக்கன் வாழ்க்கை வரலாறு குறித்தான திரைப்பட சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. சென்னை காவல் துறையில் 112 காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்கள் இயங்கி வருகின்றன. காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்களை சேர்ந்த உறுப்பினர்களை ஊக்கப்படுத்த பல்வேறு விளையாட்டு போட்டிகள், போட்டி தேர்வு பயிற்சிகள், மாலைநேர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர கல்விச் சுற்றுலாவாக மாணவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று ஊக்கப்படுத்தப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, சிறார் மன்றங்களை சேர்ந்த சிறுமியர் மற்றும் சிறுவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் மனோகர் ஏற்பாட்டில் நேற்று காலை 9 மணிக்கு சென்னை வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ் திரையரங்கில், முன்னாள் தமிழக உள்துறை அமைச்சரான கக்கன் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவண திரைப்படமான ‘கக்கன்’ திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. இதை காவல் சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்கள் மட்டும் சுமார் 150 பேர் கண்டு மகிழ்ந்தனர்.

The post கக்கன் வாழ்க்கை வரலாறு திரைப்பட சிறப்பு காட்சி: காவல்துறை சிறுவர், சிறுமியர் மன்றத்தினர் பார்வையிட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: