வேலூரில் ரூ150 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடியே 58 லட்சத்து 58 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தேனி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 50 படுக்கை வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகள் அமைக்க தேசிய ஆயுஷ் திட்ட இயக்ககத்தால் அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான நிர்வாக ஒப்புதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை ஆகியவற்றில் பணிபுரிந்து பணிக் காலத்தில் உயிரிழந்த 43 பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

The post வேலூரில் ரூ150 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: