உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் சுற்று 35வது நகர்த்தலுக்குப் பிறகு டிராவில் முடிந்தது

பெக்கு: உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் சுற்று 35வது நகர்த்தலுக்குப் பிறகு டிராவில் முடிந்தது. கார்ல்சன் பிரக்ஞானந்தா மோதிய இறுதிப் போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது. முதல் சுற்று டிராவில் முடிந்த நிலையில் நாளை இரண்டாம் சுற்று போட்டி நடைபெறுகிறது. இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தால் டைபிரேக்கர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இன்று வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடுவார். நிஜத் அபசோவ்-ஃபேபியானோ காருவானா மோதிய 3-வது இடத்துக்கான போட்டியின் முதல் சுற்றில் அபசோவ் வெற்றி பெற்றனர்.

உலக கோப்பை செஸ் தொடர் போட்டி அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னை சேர்ந்த பிரக்ஞானந்தா உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வீரரான அமெரிக்காவின் பேபியோனா கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். பிரக்ஞானந்தா உலக கோப்பை செஸ் இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம், இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்க்கு பிறகு செஸ் உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு வந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்த இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். அதன்படி, முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கி, மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக விளையாடினார். இரண்டு வீரர்களும் முதல் 40 நகர்வுகளுக்கு 90 நிமிடங்களைப் பெறுவார்கள். அதன்பின் மீதமுள்ள ஆட்டத்திற்கு 30 நிமிடங்கள், நகர்வு 1ல் தொடங்கி ஒரு நகர்வுக்கு 30 வினாடிகள் அதிகரிக்கும். இதில் பிரக்னாநந்தாவின் முதல் நகர்வை இந்தியத் தூதர் ஸ்ரீதரன் மதுசூதனன் மேற்கொண்டார். பிரக்னாநந்தா தனது முதல் நகர்வாக c4 க்கு செல்ல, கார்ல்சன் e5 க்கு சென்றார். பிரக்னாநந்தா 12வது நகர்வாக d3 க்கு செல்ல, கார்ல்சன் h6 க்கு தனது நகர்வை மேற்கொண்டார்.

அடுத்தடுத்த நகர்வுகளுக்கு இருவரும் பொறுமையாக இருந்தனர். மேக்னஸ் கார்ல்சன் தனது 13வது நகர்வில் 28 நிமிடங்கள் செலவிட்டார். பிறகு பிரக்ஞானந்தா தனது நகர்வுகளில் நேரத்தை எடுத்துக்கொள்கிறார். அதே நேரத்தில் கார்ல்சன் பிரக்ஞானந்தாவின் நகர்வுகளுக்கு விரைவான முறையில் காய் நகர்த்தினார். இந்நிலையில், தற்பொழுது முதல் சுற்று முடிவடைந்துள்ளது. இதில் பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் இருவரும் 1/2 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளனர். இதனால் முதல் சுற்று சமனில் முடிவடைந்துள்ளது. மீண்டும் நாளை பிரக்ஞானந்தா கருப்பு காய்களுடன் போட்டியில் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடினமான போட்டியாகத்தான் இருக்கும்; வெற்றிக்காக கார்ல்சன் தீவிரமாக போராடுவார்; ஓய்வு எடுத்துவிட்டு, புத்துணர்ச்சியுடன் நாளை திரும்பி வந்து, என்னால் முடிந்ததை முயற்சி செய்வேன்.செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் முதல் சுற்று சமனில் முடிந்துள்ள நிலையில், 2வது சுற்று குறித்து இந்திய வீரர் பிரக்ஞானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

The post உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் சுற்று 35வது நகர்த்தலுக்குப் பிறகு டிராவில் முடிந்தது appeared first on Dinakaran.

Related Stories: