குஜராத் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழகத்தில் “சனாதன இலக்கியம்” என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகம்..!!

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று சனாதன இலக்கியத்தின் கோட்பாடுகளை பாடமாக கற்பிக்க தொடங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வதோதராவில் உள்ள மகாராஜா, சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தான் சனாதன இலக்கியம் என்ற இந்து மதத்தின் கொள்கைகளை பாடமாக கற்கின்றனர். சனாதன இலக்கியம் என்ற பெயரில் புதிய பாடத்திட்டத்தை மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாடத்திட்டத்தில், உபநிடதங்கள் பற்றிய, வேதத்திற்குப் பிந்தைய ஆய்வுகளின் போதனைகள் அடங்கியுள்ளன.

சனாதனம் என்ற பெயரிடம் பயன்படுத்தி ஒரு பாடத்திட்டத்தை ஏற்படுத்தியிருப்பது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்று பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தெரிவித்துள்ளது. தேசிய கல்விக்கொள்கை 2020 கட்டமைப்பின் கீழ் நடப்பு கல்வியாண்டு முதல் பி.ஏ. முதலாண்டு மாணவர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பாடமாக ” சனாதன இலக்கியம்” இருக்கும். சுமார் 160 மாணவர்கள் இப்பாடத்தை தேர்வு செய்திருப்பதால் அவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் செமஸ்டரில் உபநிதங்கள் அடிப்படையிலான கதைகள் கற்பிக்கப்படும். இதையடுத்து படிப்படியாக பகவத் கீதை மற்றும் மத அடிப்படையிலான நூல்கள் கற்பிக்கப்படும்.

The post குஜராத் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழகத்தில் “சனாதன இலக்கியம்” என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகம்..!! appeared first on Dinakaran.

Related Stories: