பெரம்பலூர் அருகே பெட்ரோல் ஊற்றி மாற்றுத்திறனாளியை கொல்ல முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை

பெரம்பலூர், ஆக.22: பெரம்பலூர் அருகே பெட்ரோல் ஊற்றி – தீ வைத்து மாற்றுத்திறனாளியை கொலை செய்ய முயற்சித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க கதறியபடி கலெக்டரின் காலில் விழுந்து மனுகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெண்ணக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை மகன் செல்வம்(35). மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 8ம் தேதி அதே ஊரில் உள்ள விசிக கொடிக்கம்ப மேடையில் படுத்து, உறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்மீது அதே ஊரை சேர்ந்த ஒருவர் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து விட்டு, ஓடி விட்டதாக தெரிகிறது. பரமசிவம்- செல்வம் இடையே செல் போன் அடமானம் வைப்பது தொடர்பாக பிரச்னை இருந்ததாகவும், அதன் காரணமாக பெட்ரோல் ஊற்றி வைத்துவிட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செல்வத்தின் குடும்பத்தினர் கொடுத்தப் புகாரின் பேரில் மங்கலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், மேற்கொண்டு விசாரணை செய்து கைது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட செல்வம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச் சையில் இருப்பதால் நீதி கேட்டும்உடனடி நடவடிக் கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, செல்வத்தின் தாய், சகோதரி மற்றும் சகோதரர் முனியன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நேற்று (21ம் தேதி) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மதியம் வந்தனர். அப்போது பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமை முடித்துக் கொண்டு போராடிக்கோவுக்கு வந்து காரில் ஏற முற்பட்டபோது, கலெக் டர் எதிர்பாராத நிலையில் அவரது காலில் விழுந்து, கண்ணீர் மல்க கதறி அழுதவாறு மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post பெரம்பலூர் அருகே பெட்ரோல் ஊற்றி மாற்றுத்திறனாளியை கொல்ல முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: