செங்கல்பட்டு: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடைப்பெறும் என, கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், செங்கல்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம்கள் 25.8.2023 அன்று மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், மற்றும் 15.9.2023 அன்று மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்கள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.
