மானாமதுரை பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சகஸ்ரசண்டி யாகம் தொடக்கம்

மானாமதுரை, ஆக. 20: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் 21ம் ஆண்டு சகஸ்ர சண்டி யாகம் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. இந்த யாகத்தின் தொடக்கமாக கோயில் யாகசாலையில் புனிதநீர் கலசங்கள் வைத்து மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா ஹோமம் நடத்தப்பட்டது. தஞ்சை குருஜீ கணபதி சுப்ரமணியம் சாஸ்திரிகள் தலைமையில் யாகமானது நடைபெற்றது. யாகத்தின் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ருணமோஷன கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பைரவபலி மண்டல பூஜை நடைபெற்றது.

இந்த யாகம் தொடர்ந்து 20ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும். குழந்தை வரம் வேண்டும் தம்பதியினருக்காக 19ம் தேதி புத்திர காமேஷ்டி யாகம் நடைபெறுகிறது. யாகத்தின் கடைசி நாளாக 20 ஆம் தேதி காலை சகஸ்ர சண்டி யாகம் தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது. அதன்பின் பூர்ணாஹூதியாகி கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் பிரத்தியங்கிரா தேவிக்கு கலசநீரால் பாதசமர்ப்பணம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. யாகத்தை கண்டு தரிசிக்க தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். யாகத்துக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக பிரத்தியங்கிரா வேததர்ம ஷேத்ரா டிரஸ்ட் நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள், மாதாஜி ஆகியோர் செய்துள்ளனர்.

The post மானாமதுரை பிரத்தியங்கிரா தேவி கோயிலில் சகஸ்ரசண்டி யாகம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: