தமிழ்நாட்டுக்கு 10 டிஎம்சி காவிரி நீர் திறக்கப்படும்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு

பெங்களூரு: தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி காவிரி நீர் திறந்துவிடப்படும் என்று கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். நடுவர் மன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி நீர் திறந்துவிடப்படும் என்று துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், ‘தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியதில்லை.

நாமெல்லாம் சகோதரர்கள். இதை நமக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை. உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இருக்காது. எனினும் இந்த வழக்கை எதிர்கொள்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்கும், கர்நாடக விவசாயிகளுக்குமே நீர் போதுமானதாக இல்லை. ஆனாலும் தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி காவிரி நீர் திறந்துவிடப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது’ என்றார்.

The post தமிழ்நாட்டுக்கு 10 டிஎம்சி காவிரி நீர் திறக்கப்படும்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: