77வது சுதந்திர தினத்தில் இந்திய ஜவுளியை கவுரவித்த கூகுள் டூடுல்

புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜவுளி துறையை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

கூகுள் நிறுவனமும் தனது பாணியில் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி, கூகுள் நிறுவனம் சிறப்பான டூடுலை வெளியிட்டு இந்தியாவை கவுரவித்துள்ளது. இந்த டூடுலில், இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கைத்தறி, ஜவுளி, கைவினை பொருட்களை மையப்படுத்திய ஓவியத்தை வெளிப்படுத்தி உள்ளது.

ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தான், புதிய சகாப்தம் இந்தியாவில் தொடங்கியதாக டூடுலுடன் வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த கூகுள் டூடுலை டெல்லியை சேர்ந்த நம்ரதா குமார் என்பவர் வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த டூடுலின் மூலம் நாட்டின் பல்வேறு புவியியல் குறியீடுகளை காட்டியுள்ளேன். இந்தியாவின் அடையாளத்துடன் ஆழமான தொடர்பு கொண்ட ஆடைகளை கவுரவிப்பதும், கொண்டாடுவதும் முக்கியம் என்பதால், இதனை வரைந்தேன். டூடுல் ஓவியத்தில் இந்திய ஆடைகள், திறமையான கைவினைஞர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், அச்சுப்பொறிகள், எம்பிராய்டரிகளின் கைவண்ணம் கலந்திருக்கும்’ என்றார்.

The post 77வது சுதந்திர தினத்தில் இந்திய ஜவுளியை கவுரவித்த கூகுள் டூடுல் appeared first on Dinakaran.

Related Stories: