திருமலை: திருப்பதி மலைப்பாதையில் ஏறும் பக்தர்கள் பாதுகாப்பிற்கு தடி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. படிகள் ஏறுமிடத்தில் பக்தர்கள் பாதுகாப்பு காரணத்திற்காக தடியை கொடுத்து அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை சிறுத்தைகள் தொடர்ந்து தாக்கி வருவதால் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.