சீனா, பாகிஸ்தானை சமாளிக்க ஸ்ரீநகரில் மிக்-21க்கு பதில் மிக்-29 போர் விமானங்கள்: புதிய தளம் அமைத்து இந்தியா அசத்தல்

ஸ்ரீநகர்: சீனா, பாகிஸ்தானை சமாளிக்க ஸ்ரீநகரில் மிக்-21க்கு பதில் மிக்-29 போர் விமானங்களை நிறுத்தி இந்திய விமானப்படை புதிய தளம் அமைத்து உள்ளது. காஷ்மீர் எல்லையில் இன்றும் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக பாகிஸ்தான் மற்றும் சீனப்படைகள் உள்ளன. இதையடுத்து அங்கு புதிய விமானப்படைப்பிரிவை அமைக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்கு முன்னர் ஸ்ரீநகரில் மிக்-21 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டன.

தற்போது ஸ்ரீநகரில் புதிய தளம் அமைத்து மிக்-21 ரக போர் விமானங்களுக்கு பதில் மிக்-29 ரக போர் விமானங்களை நிறுத்த இந்திய விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது. ட்ரைடென்ட்ஸ் படை என்று அழைக்கப்படும் மிக்-29 ரக போர் விமானப்படை இப்போது ஸ்ரீநகரில் மேம்படுத்தப்பட்ட விமான படைத்தளத்தில் எதிரிகளை தாக்க தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஸ்ரீநகர் அமைந்துள்ளது. அதன் உயரம் சமவெளி பகுதிகளை விட உயரமாக உள்ளது.

எனவே நீண்ட தூரம் பறந்து செல்லும் மிக்-29 ரக போர் விமானங்கள் மூலம் எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க முடியும். ஏற்கனவே 2019ல் பாலாகோட் வான்வழித்தாக்குதல் நடந்த போது பதிலடி கொடுத்ததில், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதிலும் மிக்-29 ரக போர் விமானம் வெற்றிகரமாக செயல்பட்டது. மிக்-29 ரக போர் விமானத்தை இரவில் இயக்க முடியும். சீன படைகள் ஏதேனும் வான்வெளி அத்துமீறல் முயற்சிகள் நடந்தால் முதலில் பதிலடி கொடுக்க மிக்-29 ரக போர் விமானங்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.

The post சீனா, பாகிஸ்தானை சமாளிக்க ஸ்ரீநகரில் மிக்-21க்கு பதில் மிக்-29 போர் விமானங்கள்: புதிய தளம் அமைத்து இந்தியா அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: