கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் கலைஞர் உரிமை மகளிர் திட்டத்தை செயல்படுத்துவதை குறித்து விரிவன ஆலோசனை நடைபெற்று வருகிறது. திட்டத்தை பொறுத்தவரை செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. 3 கட்டங்களாக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. திட்டத்தை செயல்படுத்தக்கூடிய விதமாகவும் தற்போது திட்டம் எவ்வாறு செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை கையாண்டு கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவுறுத்தல்களையும் மாவட்ட ஆட்சியர்களுக்கு இதற்கு முன்பாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டங்களில் அறிவுறுத்தியிருந்தார்.

அதன் அடிப்படையில் தற்போது பெறப்பட்டிருக்கக்கூடிய விண்ணப்பங்களின் நிலை கேட்டறிந்து திட்டம் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்று வருகிறது. மகளிர் உரிமை திட்டத்திற்கு இதுவரை 1 கொடியே 48 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகவே இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் பயனாளர்களுக்கு முறையாக தேர்வு செய்து தகுதியான யாருக்கும் விடுபட்டு விடாமல் இந்த உரிமைத்தொகை கிடைக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்கக்கூடிய விதத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

The post கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: