கடவூர் அருகே வந்த வழி கருப்பசாமி கோயிலில் ஆடி மாத பெருவிழா

 

தோகைமலை, ஆக. 11: கடவூர் அருகே பாலவிடுதி ஊராட்சி, சிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற, வந்த வழி கருப்பசாமி கோயிலில் நடந்த ஆடி மாத பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கடவூர் அருகே பாலவிடுதி ஊராட்சி சிங்கம்பட்டியில் கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட வந்தவழி கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாத அன்னதான அபிஷேக பெருவிழா நடத்த, பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரம்மாள் பண்ணை வெள்ளைச்சாமி, கிராம மக்கள் முடிவு செய்தனர்.

முதல் நாள் அன்று காவிரியில் இருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்து வந்து கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். இரண்டாம் நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள், 500 கிடாக்களை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சிறப்பு அபிஷேகம் அன்னதானம் வழங்கப்பட்டது. இக்கோயில் விழாவில் பாலவிடுதி ஊராட்சி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

The post கடவூர் அருகே வந்த வழி கருப்பசாமி கோயிலில் ஆடி மாத பெருவிழா appeared first on Dinakaran.

Related Stories: