இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி அடிச்சட்டம் நல்ல நிலையில் இயக்கத்தில் உள்ள பேருந்துகள் தற்போது புதுப்பிக்கப்பட்டு அவற்றுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு வருகிறது. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவையும் விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் முதல்கட்டமாக 100 பேருந்துகள் நாளை முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இந்த பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்ைன, தீவுத்திடலில் நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் சிவசங்கர் செய்து வருகிறார்.
The post சென்னை தீவுத்திடலில் நடக்கும் விழாவில் புதுப்பிக்கப்பட்ட அரசு பேருந்துகளை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.
