சந்திரயான் – 3 விண்கலத்தின் நிலவு சுற்றுவட்ட பாதை மேலும் குறைப்பு: இஸ்ரோ அதிகாரிகள் தகவல்

சென்னை: சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவு சுற்றுவட்ட பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 விண்கலம் எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. அதனை தொடர்ந்து செயற்கைக்கோளின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது கடைசி கட்டமாக லூனார் ஆர்பிட் எனப்படும் நிலவின் சுற்றவட்டபாதைக்குள் தற்போது நிலவை சுற்றி வருகிறது. கடந்த ஆக.1ம் தேதி நள்ளிரவு 12.15 மணியளவில் புவியின் இறுதி சுற்றுவட்டப்பதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்ட பாதையை நோக்கிய விண்கலம் பயணிக்க தொடங்கியது.

4ம் நாளில் விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் கடந்த ஆக.5ம் தேதி நுழைந்தது, முதல் சுற்றை முடித்து கடந்த 6ம் தேதி அடுத்து சுற்றுவட்டபாதையில் இறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் விண்கலத்தின் நிலவு சுற்றுவட்ட பாதை மேலும் குறைக்கப்பட்டது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு: நிலவின் மேற்பரப்பை மேலும் நெருங்கியுள்ளோம், சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை 174 கி.மீ. x 1437கி.மீ. தூரத்திற்கு குறைக்கப்பட்டது. அடுத்த சுற்றுபாதை குறைக்கும் பணிகள் வரும் 14ம் தேதி மதியம் 11.30 மணி மற்றும் 12.30 மணிக்கு இடையே நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சந்திரயான் – 3 விண்கலத்தின் நிலவு சுற்றுவட்ட பாதை மேலும் குறைப்பு: இஸ்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: