மணிப்பூரில் நிலவும் இந்த சூழலுக்கு காங்கிரஸ் ஆட்சியே காரணம்: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜூஜூ குற்றச்சாட்டு

டெல்லி: மணிப்பூரில் நிலவும் இந்த சூழலுக்கு காங்கிரஸ் ஆட்சியே காரணம் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜூஜூ குற்றம் சாட்டினார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். பிரதமர் மோடி பதில் அளிக்க வராததால், ஒன்றிய அரசுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆளும் ஒன்றிய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான இரண்டாவது நாள் விவாதம் காரசாரத்துடன் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

மணிப்பூருக்கு மோடி போகாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, மணிப்பூரை மோடி அரசு இரண்டாக உடைத்து விட்டது. மணிப்பூரில் பாரத மாதாவை படுகொலை செய்துவீட்டீங்கள். மணிப்பூர் மக்களை கொன்றதால் பாததாயை நீங்கள் கொன்றுவீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல தேசதுரோகிகள் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதற்கு ஒன்றிய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது திடீரென குறுக்கிட்டு பேசிய ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜூஜூ; மணிப்பூர் விவகாரம் குறித்து பேச ராகுல் காந்திக்கு தகுதியில்லை, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மணிப்பூரில் நிலவும் இந்த சூழலுக்கு காங்கிரஸ் ஆட்சியே காரணம். எதிர்க்கட்சிகள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. ஆனால், கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு இந்தியா என்று பெயர் வைப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று கூறினார்.

The post மணிப்பூரில் நிலவும் இந்த சூழலுக்கு காங்கிரஸ் ஆட்சியே காரணம்: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜூஜூ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: