மின்சாரத்தின் இருண்ட முகம் எனும் ஆய்வறிக்கை வெளியீடு: நிலத்தடி நீரில் பாதரசம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல்

சென்னை: என்.எல்.சி நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீரில் 259 மடங்கு பாதரசம் அதிகரித்துள்ளதாக பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட சுற்றுசூழல் அமைப்புகள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பூவுலகின் நண்பர்கள் தயாரித்துள்ள நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் செயல்பாடுகளால் ஏற்பட்ட சுற்றுசூழல் சீர்கேடுகள் குறித்து மின்சாரத்தின் இருண்ட முகம் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இயற்கைக்கு முரணான செயலை என்.எல்.சி நிறுவனம் செய்து வருவதாக கூறியுள்ளார். மக்கள் விவசாயம் செய்யும் இடங்களிலும் குடிநீர் ஆதாரம் உள்ள இடத்திலும் அனல்மின் நிலையத்தின் கழிவுகள் சேர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் நீதிமன்றம் வரை சென்ற பிறகும் நிலத்தை வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் சுற்றுசூழல் குறித்த அனைத்து பரிந்துரைகளையும் செயல்படுத்தும் வகையில் என்.எல்.சி நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். மாசுவால் ஏற்படும் பாதிப்புகளை ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவை அமைத்து மதம் தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த குழுவில் சுற்றுசூழல் ஆய்வாளர்கள் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.

The post மின்சாரத்தின் இருண்ட முகம் எனும் ஆய்வறிக்கை வெளியீடு: நிலத்தடி நீரில் பாதரசம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: