திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர் இடிந்து விழுந்து விபத்து.. பக்தர்கள் ஷாக்

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலின் கிழக்கு நுழைவுவாயிலில் உள்ள கோபுரத்தின் 2 நிலைகளிலும் மேற்கூரை பூச்சுகளும் அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அபாயகரமாக உள்ள இந்த கிழக்கு வாசல் கோபுர வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதனால் அச்சத்துடன் செல்லும் நிலையே நிலவுகிறது. இதனிடையே நேற்று மாலை திருச்சி பகுதியில் 30 நிமிடங்கள் வரை கனமழை பெய்தது.

இதனால் விரிசல் அதிகமான நிலையில், முதல் நிலை கோபுரத்தின் சுவர் மளமளவென சரிந்து விழுந்தது.நள்ளிரவு 1.50 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றதால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த கற்கள் மற்றும் பூச்சுகளை அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அதே நேரம் இந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இடிந்த கோபுர சுவரினை முழுமையாக புதிதாக கட்டித்தர வேண்டும் என அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர் இடிந்து விழுந்து விபத்து.. பக்தர்கள் ஷாக் appeared first on Dinakaran.

Related Stories: