கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்க வேண்டும்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை, எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் கிராம வங்கிகள் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், ஒன்றிய நிதிசேவை செயலாளர் தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், பல்வேறு மாநில அரசுகளை சேர்ந்த நிதித்துறை அதிகாரிகளுகள், தெற்கு மண்டலத்தின் கிராம வங்கி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆய்வு கூட்டத்தில் கிரம வங்கிகளை முழுவதுமாக கணினிமயமாக்கும் பணிகளை மேற்கொள்ளவும், கிராமப்புறங்களில் வங்கி கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு டிஜிட்டல் பணப்பரிமாற்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி அதை பயன்படுத்த அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மேலும் விவசாய கடன் கேட்டு வருபவர்களுக்கு விரைவாக வழங்கவும், டிஜிட்டல் முறையிலும் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வங்கி நிர்வாகிகளுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.

The post கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்க வேண்டும்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: