தேவையானவை:
அரிசி – 100 கிராம
அவல் – 200 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய் – 1
கடுகு – 1 தேக்கரண்டி
இஞ்சி துருவல் = சிறிதளவு.
செய்முறை:
அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து ஒன்றாகச் சேர்த்து நைசாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி ஆகியவைகளைப் போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும். தோசைக்கல்லில் மாவை தேவையான அளவு சேர்த்து, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டு எடுக்கவும்.