குண்டாறு நீர்வீழ்ச்சிக்கு தடையை மீறி பயணம்; தடுப்பு வேலியை உடைத்து சென்றவர்கள் குறித்து விசாரணை..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் குண்டாறு அணைக்கு மேல் உள்ள நீர்வீழ்ச்சிக்கு தடையை மீறி சுற்றுலாப்பயணிகள் செல்கின்றனர். தென்காசி மாவட்டம் குண்டாறு அணை பகுதிக்கு மேல் சுமார் 10க்கும் மேற்பட்ட தனியார் நீர்வீழ்ச்சிகள் செயல்படுவதாகவும், தற்போது குற்றால சீசன் என்பதால் இந்த காலக்கட்டத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவதால் அவர்களை குறிவைத்து சாலை இல்லாத பகுதிகளில் தொடர்ந்து ஜீப்களில் அருவிக்கு அழைத்துச் செல்வதாகவும் புகார் எழுந்தது. மலைப்பாதையில் ஜீப்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் நேரிட்ட காரணத்தால் வருவாய் கோட்டாட்சியர் தடை விதித்தார்.

மேலும் அப்பகுதியில் கேட் அமைக்கப்பட்டது. இந்நிலையில், வருவாய் கோட்டாட்சியரால் போடப்பட்ட கதவுகளை உடைத்த மர்ம நபர்கள், ஜீப்களை ஓட்டி சென்றுள்ளனர். அரசு அதிகாரிகள் விதித்த தடையை மீறி தனியார் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப்பயணிகள் அழைத்து செல்லப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்த விடீயோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், குண்டாறு நீர்வீழ்ச்சிக்கு தடையை மீறி வருவாய் கோட்டாட்சியரால் போடப்பட்ட கதவுகளை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post குண்டாறு நீர்வீழ்ச்சிக்கு தடையை மீறி பயணம்; தடுப்பு வேலியை உடைத்து சென்றவர்கள் குறித்து விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: