கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்வு

தர்மபுரி, ஆக.4: தர்மபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 44வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம், லீக் போட்டிகளின் பரிசளிப்பு விழா தர்மபுரியில் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு தர்மபுரி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மார்டின்ராஜ் ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தார். தர்மபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் 2022-2023 நடத்திய லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன. முதல் மற்றும் இரண்டாவது டிவிசனில் சிறந்த பேட்ஸ்மேன். பௌலர் மற்றும் ஆட்ட தொடர் நாயகன் விருது பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 10 இளம் வீரர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

இதை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 2023-2026 ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் சுரேஷ் தலைவராகவும், இதே போல் துணை தலைவர், உதவி செயலாளர், இணை செயலாளர் பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் போட்டியின்றியும் தேர்வாகினர். கௌரவ செயலாளர் பதவிக்கு மட்டும் மார்டின்ராஜ் மற்றும் பெருமாள் ஆகிய இருவர் போட்டி இட்டதால் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான 29 வாக்குகளில் மார்டின்ராஜ் 28 வாக்குகளை பெற்று கௌரவ செயலாளராக வெற்றி பெற்றார்.

The post கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: