காஞ்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணியில் புதிதாக தேர்வான நிர்வாகிகள் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஆலந்தூர் கோல்டு பிரகாஷ், துணை அமைப்பாளர்கள் மறைமலைநகர் கமலக்கண்ணன், செங்கல்பட்டு மணிகண்டன், தையூர் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் ராமமூர்த்தி, பழைய பல்லாவரம் ஜானகிராமன் ஆகியோர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்த்தித்து வாழ்த்து பெற்றனர். இதில், எம்பிகள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் appeared first on Dinakaran.

Related Stories: