ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பூக்கள் விலை அதிகரிப்பு: ரூ.300-க்கு விற்பனையான மல்லிகை கிலோ ரூ.900-ஆக உயர்வு

திண்டுக்கல்: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சந்தையில் பூக்கள் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் மலர்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மலர்சந்தையில் வடமாவட்டங்கள், தென்மாவட்டங்கள், அண்டை மாநிலம் கேரளாவிற்கும் அதிகளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நிலக்கோட்டை மலர்சந்தை தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மலர்சந்தைகளில் ஒன்று. நாளை ஆடிப்பெருக்கு விழாவையொட்டி மலர்சந்தையில் பூக்கள் விலை அதிகரித்து விற்பனையாகிறது.

கடந்த 2 தினங்களாக மல்லிகை பூ விலை ரூ.300-க்கு வீரப்பனையான நிலையில் இன்று கிலோ ரூ.900-வை கடந்து விற்பனையாகி வருகிறது. முல்லை – ரூ.450 , ஜாதி மல்லி – ரூ.400, சம்மங்கி – ரூ.200, கனகாம்பரம் – ரூ.350 மற்றும் பட்டன் ரோஸ் – ரூ.200, செண்டுமல்லி- ரூ.100, துளசி – ரூ.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு பூக்கள் விற்பனையாகி வருகிறது. கடந்த வாரத்தைவிட பூக்கள் விலை உயர்ந்து விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையிலும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி மலர்கள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி மலர் சந்தை தென் மாவட்டத்தின் பிரதான சந்தை. மதுரை மல்லிக்கு சுற்றுவட்டாரங்களில் அதிக வரவேற்பு உள்ளது. கடந்த சில தினங்களாக மதுரை மல்லியின் விலை ரூ.400-க்கு விற்பனையான நிலையில் நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு மல்லிகை பூவின் விலை அதிகரித்துள்ளது. இன்று மதுரை மல்லியின் விலை ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லை- ரூ.600, பிச்சிப்பூ – ரூ.700, செண்டுபூ -ரூ.100, ரோஸ் – ரூ.250, செவ்வந்தி – ரூ.220, அரளிப்பூ -ரூ.200-க்கும் விற்பனையாகிறது. அடிப்பெருக்கை அடுத்து ஆடி வெள்ளி என்று இந்த மாதம் முழுவதும் பூக்களின் விலை ஏறுமுகமாக இருக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

The post ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பூக்கள் விலை அதிகரிப்பு: ரூ.300-க்கு விற்பனையான மல்லிகை கிலோ ரூ.900-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: