அதிமுக, பாஜவை சேர்ந்த மேற்பார்வையாளர்கள், விற்பனையாளரால் விதிமுறைகளை மீறி செயல்படும் டாஸ்மாக்: அமைச்சர், கலெக்டரிடம் தொமுச புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர் ஆகியோர் விதிமுறைகளை மீறி டாஸ்மாக் கடையை செயல்படுத்துவதாக, தொமுச பேரவை தொழிற்சங்கத்தினர், அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளனர். தமிழ்நாடு மாநில வாணிப கழகம் பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுந்தரவரதன், மாவட்ட தலைவர் கே.ஏ.இளங்கோவன் (தொமுச) மாநில செயலாளர் ஜெயராமன், மாவட்ட தலைவர் வரதன், மாவட்ட செயலாளர் அரசு (தொமுச-டாஸ்மார்க்) மற்றும் நிர்வாகிகள் பார்த்திபன், செல்வகுமார் ஆகியோர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், வடக்கு டாஸ்மாக் அலுவலகத்தில் 2 மேற்பார்வையாளர்கள், 1 விற்பனையாளர் என 3 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவையும், விதிமுறைகளை மீறி டாஸ்மாக் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், அதிமுக மற்றும் பாமக, பாஜ தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள், மாவட்ட மேலாளருக்கு வழிகாட்டுதல் மூலம் தவறான செயலுக்கு உட்படுத்தப்படுவதால், திமுக தொமுச பேரவை தொழிற்சங்கத்தை அழிக்க நினைக்கும் வகையில் செயல்படுகின்றனர். மேலும், அரசாங்கத்திற்கு அவப்பெயர் எற்படுத்தும் வகையில் மேற்கூறிய நபர்கள் செயல்படுகின்றனர். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர் ஆகிய 3 பேரை, கடைப்பணிக்கு அனுப்பி டாஸ்மாக் நிர்வாகத்தை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம்.

The post அதிமுக, பாஜவை சேர்ந்த மேற்பார்வையாளர்கள், விற்பனையாளரால் விதிமுறைகளை மீறி செயல்படும் டாஸ்மாக்: அமைச்சர், கலெக்டரிடம் தொமுச புகார் appeared first on Dinakaran.

Related Stories: