காரையூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

 

பொன்னமராவதி, ஜூலை 25:காரையூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. பொன்னமராவதி அருகே காரையூர் பகுதியில் இன்று (25ம் தேதி) மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் காரையூர் மின் பாதையான முள்ளிப்பட்டி, கீழத்தானியம், மேலத்தானியம்,காரையூர், ஆலம்பட்டி, நல்லூர் அரசமலை, பகுதிகள், ஒலியமங்களம் மின்பாதையான உசிலம்பட்டி, காயாம்பட்டி, ஒலியமங்களம், சடையம்பட்டி, படுதனிப்பட்டி, ஆகிய கிராம பகுதிகளுக்கு இன்று (25ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என பொன்னமராவதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post காரையூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: