திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில், திரிபுரசுந்தரியம்மன் அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. இக்கோயில் உலகப் பிரசித்திப்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். தாழக்கோயிலான பக்தவச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில் திரிபுரசுந்தரியம்மன் கோயில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழா கடந்த 13ம் தேதி திரிபுரசுந்தரியம்மன் கோயில் எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
முதல் நாளைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் 4 மாடவீதிகளில் வீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திரிபுரசுந்தரியம்மனுக்கு மேளம், தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனைக்காண திருக்கழுக்குன்றம் மட்டுமல்லாது சுற்று வட்டார கிராம மக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
The post திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் திரிபுரசுந்தரியம்மன் திருக்கல்யாணம் appeared first on Dinakaran.