இந்நிலையில், கோவையில் பேட்டியளித்த வானதி சீனிவாசன் வாஷிங் மெஷின் குறித்து எழுப்பிய கேள்விக்கு பாஜகவை வாஷிங் மெஷின் என்று விமரிசித்தால் ஆமாம் வாஷிங் மெஷின் தான் எங்களிடம் வந்தால் தூய்மையாக மாற்றி விடுவோம் என்று காட்டமாக பதில் அளித்தார். எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடத்தப்படுவதாக எழுப்பிய கேள்விக்கு என்.டி.ஏ. கூட்டம் நடத்துவது வழக்கமானது தான் புதிது கிடையாது என்று வானதி தெரிவித்தார். பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறதா என்பது கூட்டம் நடக்கும் போது தெரிந்து விடும் என்று அவர் தெரிவித்தார்.
The post பாஜக, வாஷிங் மெஷின்தான்… எங்களிடம் வந்தால் தூய்மையாக மாற்றி விடுவோம்: வானதி சீனிவாசன் ஆவேசம் appeared first on Dinakaran.