பாஜக கூட்டணியில் மீண்டும் சேர்ந்த ‘ராஜ்பர்’ கட்சி

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். ஏற்கனவே சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியானது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. இடைபட்ட காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, எதிர்கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டது. இந்நிலையில் மீண்டும் பாஜக கூட்டணியில் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி சேர்ந்தது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சலின் காஜிபூர், சண்டவுலி, அசம்கர் ஆகிய மக்களவைத் தொகுதிகளை ஓம் பிரகாஷ் ராஜ்பார் கேட்டுள்ளதாகவும், அதற்கு பாஜக தலைமை ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அமித் ஷா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த ஓம் பிரகாஷ் ராஜ்பரை வரவேற்கிறேன். அவரது வருகை வருகை உத்தர பிரதேச மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும். பிரதமர் மோடியின் தலைமையில் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் வலுப்பெறும்’ என்று கூறியுள்ளார்.

The post பாஜக கூட்டணியில் மீண்டும் சேர்ந்த ‘ராஜ்பர்’ கட்சி appeared first on Dinakaran.

Related Stories: