சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: நடுவழியில் நின்றதால் பரபரப்பு

ஜோலார்பேட்டை: சென்னை ரயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு டபுள் டக்கர் ரயில். நேற்று காலை 7.35 மணிக்கு 10 ஏசி பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்தது. காலை 9.16 மணியளவில் காட்பாடியில் இருந்து விரிஞ்சிபுரம் – குடியாத்தம் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது 6வது ஏசி பெட்டியில் திடீரென குபு குபுவென புகை வந்தது. டிரைவர் ரயிலை நடுவழியில் நிறுத்தினார். அதிக அளவில் புகை வெளியேறியதால் பயணிகள் கூச்சலிட்டபடி கீழே இறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் வந்து புகைக்கான காரணம் குறித்து சோதனை செய்தனர். அதில் சக்கரத்தின் பிரேக் பைண்டிங் பகுதியில் உராய்வு ஏற்பட்டு புகை வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே ஊழியர்கள் வந்து பழுதடைந்த பகுதியை சீரமைத்தனர். இதனால் டபுள் டக்கர் ரயில் 15 நிமிடம் தாமதமாக பெங்களூர் நோக்கி புறப்பட்டு சென்றது.

The post சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: நடுவழியில் நின்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: