கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென ஏற்பட்ட புகையால் பரபரப்பு

ஓடிசா: அசாமில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட திப்ரூகர் – கன்னியாகுமரி விரைவு ரயில் ஓடிசாவின் பிரம்மாபூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது புகை வந்தது. ரயிலின் பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் இருந்து புகை வந்ததால் அலறியடித்துக் கொண்டு பயணிகள் கீலே இறங்கி ஓடினர்.

சமீப காலமாக அதிகப்படியாக ரயில் விபத்துக்கள் நடைபெற்று வருவதை கண்டு பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் ஓடிசாவின் பிரம்மாபூர் அருகே மீண்டும் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.

திப்ரூகர் – கன்னியாகுமரி இடையே இயக்கப்பட கூடிய விவேக் விரைவு ரயிலின் சக்கரத்தில் சாக்கு பை சிக்கியதால் புகை ஏற்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ரயில்வே நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாபூர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளத்தில் இருந்த சாக்குமூட்டையில் ரயிலின் சக்கரம் சிக்கி பிரேக் கட்டியதன் காரணமாக விபத்து ஏற்பட்டததாகவும், அதிர்ஷ்டவசமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து காரணத்தால் 15 முதல் 30 நிமிடங்கள் வரை பிரம்மாபூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதாகவும், தீவிர சோதனைக்கு பின்னர் ரயில் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையும் பிரம்மாபூர் ரயில் நிலையத்தில் இருக்கக்கூடிய காவல்நிலையத்தில் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென ஏற்பட்ட புகையால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: