பென்காக் சிலாட் விளையாட்டு அறிமுக விழா

 

ராஜபாளையம், ஜூலை 10: ராஜபாளையத்தில் உள்ள தனியார் உள் விளையாட்டு அரங்கில் தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள பென்காக் சிலாட் விளையாட்டின் அறிமுக விழா மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், திருவில்லிபுத்தூர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஏசியன் விளையாட்டுகள் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விளையாட்டை ஒன்றிய அரசு, மாநில அரசின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்த விளையாட்டு துங்கல், சோலோ என தனி நபர் திறனறிதல், கண்டா என இரு நபர் ஒரே நேரத்தில் திறன்களை வெளிப்படுத்துதல், டாண்டிங் என்ற சண்டை போட்டி மற்றும் ரகு என்ற 3 பேர் இணைந்து விளையாடும் குழு போட்டி என 5 பிரிவுகளில் விளையாடப்படுகிறது.

இந்த விளையாட்டை அறிமுகம் செய்து வைத்த தமிழ்நாடு பென்காக் சிலாட் சங்கத்தின் மாநில செயலாளர் மகேஷ் பாபு, விளையாட்டின் அடிப்படை குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். பயிற்சி முகாமில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கும், அதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெறுவார்கள். இந்த விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீடு மூலம் ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுவதால், தமிழக அரசு இந்த விளையாட்டுக்கு உரிய அங்கீகாரம் அளித்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post பென்காக் சிலாட் விளையாட்டு அறிமுக விழா appeared first on Dinakaran.

Related Stories: