சங்கரலிங்கபுரத்தில் சேதமடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தை புனரமைக்க கோரிக்கை

விருதுநகர், ஜூலை 8: விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கரலிங்கபுரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் செயல்பாட்டில் உள்ளது. இந்த மையத்தில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயின்று வருகின்றனர். 1996-97ல் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, கடந்த 2012-13ல் புனரமைப்பு செய்துள்ளனர். புனரமைப்பு செய்யப்பட்ட 10 ஆண்டுகளுக்கு மீண்டும் பல இடங்களில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. சுற்றுச்சுவர் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளை உடனடியாக வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.

கட்டிடத்தின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழும் மையத்தில் குழந்தைகளை அமர வைத்து கற்பித்தல் எந்த வகையில் பாதுகாப்பு தரும் என்ற கேள்வி பெற்றோருக்கு எழுந்துள்ளது. அங்கன்வாடி மையத்தை நல்ல நிலையில் உள்ள கட்டிடத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மேலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு வரும் சூழ் நிலையில் மோசமான நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தில் குழந்தைகளை அமர வைக்காமல் உடனடியான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

The post சங்கரலிங்கபுரத்தில் சேதமடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தை புனரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: