மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம்: பாஜக எம்.பி.பிரஜ் பூஷன் ஆஜராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன்

டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் பாஜக எம்.பி. பிரஜ் பூஷன் மற்றும் வினோத் தோமர் ஆகியோர் ஜூலை 18ம் தேதி ஆஜராகுமாறு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், பிரிஜ்பூஷண் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டியிருந்தனர். இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யவும், பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். பின் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், வீரர்களுடன் கடந்த 8 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, பிரஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின் வீரர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் பாஜக எம்.பி. பிரஜ் பூஷன் மற்றும் வினோத் தோமர் ஆகியோர் ஜூலை 18ம் தேதி ஆஜராகுமாறு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

The post மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம்: பாஜக எம்.பி.பிரஜ் பூஷன் ஆஜராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: