விராலிமலை அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி சாலை மறியல்

விராலிமலை: விராலிமலை அருகே உள்ள மலைக்குடிப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையால் பல்வேறு விபத்துகள் நேரிட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி வந்த நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து உடனடியாக மதுக்கடை அகற்ற வேண்டும் என கூறி விராலிமலை- புதுக்கோட்டை சாலை மலைக்குடிபட்டியில் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மலைக்குடிபட்டியில் இருந்து தென்னலூர் செல்லும் சாலையோரம் அமைந்துள்ள இந்த மதுபான கடையில் பலரும் மதுபானம் அருந்திவிட்டு சாலையில் வேகமாக வருவதால் விபத்து அதிக அளவில் நேரிட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு விசாலினி (11) என்ற மாணவி நடந்து சென்று கொண்டிருக்கும்போது மது அருந்திவிட்டு அதி வேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் குழந்தை மீது மோதி குழந்தைக்கு தற்போது கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இதில் ஆத்திரமடைந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு புதுக்கோட்டை- விராலிமலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர் வாகனங்களை பொதுமக்கள் சிறைப்பிடித்தால் சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன தகவலறிந்த இலுப்பூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலங்கி சென்றனர்.

The post விராலிமலை அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: