தக்காளி விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தலையிட வேண்டும்: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: தக்காளி விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தலையிட வேண்டும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த செல்போன் செயலியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். Co-Op Bazaar என்ற கூட்டுறவுத்துறை செயலியை அமைச்சர் பெரியகருப்பன் சென்னையில் இன்று தொடங்கிவைத்தார். பின்னர் பேசிய அவர்; செயலியில் ஆர்டர் செய்தால் பொருட்கள் வீடு தேடி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்; தக்காளி விலை உயர்வு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் உள்ளது.

ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு பிறமாநில மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டை தவிர இதர மாநில முதல்வர்கள் தக்காளியை குறைந்த விலையில் விற்பதை கவனம் செலுத்தவில்லை. தக்காளி விலையை இன்னும் கூட குறைக்கலாமா என ஆலோசித்து வருகிறோம். தக்காளி விற்பனையை மேலும் பல கடைகளுக்கு விரிவுப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளது. ஒரே நேரத்தில் எல்லா கடைகளிலும் விற்பனையை ஆரம்பித்தால் தக்காளி விற்பனை செய்வது இயலாமல் போய்விடும்.

தற்போது 3 மாநகராட்சிகளில் குறைந்த விலையில் தக்காளி விற்கும் திட்டம் மற்ற மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி, மளிகை பொருள் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தலையிட வேண்டும் என்று கூறினார்.

The post தக்காளி விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தலையிட வேண்டும்: அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.

Related Stories: