ஜூலை 19-ல் அனைத்துக்கட்சி கூட்டம்: அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய அரசு அழைப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு ஜூலை 19-ல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி வரையில் மொத்தம் 23 நாட்கள் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி, பாஜவுக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அக்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கூட்டாக பாஜவை எதிர்க்க முடிவு செய்துள்ளன.

குறிப்பாக விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, மணிப்பூர் கலவரம், பொது சிவில் சட்டம், ஆளுநர்களின் அத்து மீறல்கள் போன்ற விவகாரங்களை நாடாளுமன்றத்தில் கூட்டாக எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதுமட்டுமின்றி, பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியிருப்பது தேசிய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் கூட்டத் தொடர் நடப்பதால் பொது சிவில் சட்ட விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகளின் அடுத்தடுத்த வியூகங்களால் ஆளும் பாஜவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு ஜூலை 19-ல் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோர ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post ஜூலை 19-ல் அனைத்துக்கட்சி கூட்டம்: அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய அரசு அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: