மிக வயதானவருக்கு இருபக்க நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை: எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை சாதனை

சென்னை: மிக வயதானவருக்கு இருபக்க நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை செய்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் இதய மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று, பொறியியல் சுற்றோட்ட ஆதரவு மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: பெங்களூருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இயந்திர பொறியாளர் சந்தோஷ் (78) என்பவருக்கு உணவருந்தும்போது சுவாசத்தடை ஏற்பட்டுள்ளது. உறங்கிக் கொண்டிருக்கும்போதும் சுவாசிப்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது.

இதனால், பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, உணவுத்துகள் அவரது நுரையீரலுக்குள் சென்றிருப்பது கண்டறியப்பட்டது. ஆக்சிஜன் செறிவு நிலை 40 சதவீதத்திற்கும் குறைவானதாக இருந்ததால் செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டது. இதனால் நுரையீரல் செயல்பாடு மேலும் மோசமானது. பெங்களூரு மருத்துவமனையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு அவருக்கு இருபக்க நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை குழுவினர் பரிந்துரைத்தனர். நோயாளி நல்ல உடற்தகுதியுடன் அறுவைசிகிச்சையை தாங்கிக்கொள்ளும் திறனுள்ளவராக இருந்ததால், நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை யோசனையை மருத்துவ நிபுணர்கள் வழங்கினர். இருபக்க நுரையீரல் உறுப்பு மாற்றுக்காக மாநிலத்தின் உறுப்புமாற்று பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இவருக்குப் மூளைச் சாவடைந்த நபரிடமிருந்து நுரையீரல் தானமாக கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இந்நோயாளிக்கு இருபக்க நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு உடனடியாக மாற்றப்பட்ட உடல்நலத்தை உறுதிசெய்ய தளர்வின்றி சிறப்பான முயற்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டன. சிறப்பான முன்னேற்றத்தை தொடர்ந்து பெற்று வரும் இவர், விரைவில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறார். ஆசியாவிலேயே அதிக வயதில் இருபக்க நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதய – நுரையீரல் தீவிர மருத்துவ சிகிச்சைப்பிரிவு நிபுணர் சுரேஷ் ராவ் கேஜி கூறுகையில்: சிக்கலான அறுவைசிகிச்சைகளையும், உறுப்புமாற்று சிகிச்சைகளையும் வெற்றிகரமாக மேற்கொள்வதில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது என்றார். இதய மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று மற்றும் பொறியியல் சுற்றோட்ட மருத்துவ இயக்குனர் மற்றும் சிறப்பு நிபுணர் டாக்டர். அபர் ஜிண்டால் கூறியதாவது: மிகவும் நுட்பமான இந்த அறுவைசிகிச்சையின் வெற்றி, எம்ஜிஎம் ஹெல்த்கேரில் பணியாற்றும் மருத்துவ வல்லுனர்களின் நிபுணத்துவத்தை காட்டுகிறது. இந்த சிகிச்சை செயல்முறை முழுவதிலும் நோயாளியின் முழுமையான பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்தனர். நோயாளிகளுக்கு மிகச்சிறப்பான மருத்துவ பராமரிப்பையும், முன்னோடித்துவ சிகிச்சையையும் வழங்குவதில் முழுமையான பொறுப்புறுதியை கொண்டிருக்கிறோம். மேலும், எம்ஜிஎம் ஹெல்த்கேர் தலைமை செயல் அலுவலர் ஹரீஷ் மணியனும் கூறினர்.

The post மிக வயதானவருக்கு இருபக்க நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை: எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.

Related Stories: