சென்னை: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி சென்னை தி நகரில் கைது செய்யப்பட்டார். மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பற்றி ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அளித்த புகாரில் எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்ட நிலையில் இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜூலை 1 வரை நீதிமன்ற காவல் வழங்கி மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து ஜூன் 20ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சூர்யா தரப்பு வழக்கறிஞர் ஜாமின் மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த மதுரை நிதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பானு, எஸ்.ஜி.சூர்யாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய சைபர் கிரைம் போலீசாரின் மனு தள்ளுபடி செய்து, நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் அவதூறு வழக்கில் கைதாகி ஜாமின் பெற்ற நிலையில், நிபந்தனைகளை மீறி மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திடாத நிலையில், பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை விசாரிக்க போலீசார் தேடி வருகின்றனர்.
The post தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தீவிரமாக தேடும் போலீசார்! appeared first on Dinakaran.