விவசாய நிலத்திற்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம் 6.5 டன் மாங்காய்கள் சேதம் பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பல்லியில்

பேரணாம்பட்டு, ஜூலை 2: பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பல்லி உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை மா மரங்களை முறித்து அதில் இருந்த 6.5 டன் மாங்காய்களை சேதப்படுத்தியுள்ளது. பேரணாம்பட்டு அடுத்த சாரங்கள் அரவாட்லா ரங்கம்பேட்டை, குண்டலப்பள்ளி, பத்திரப்பல்லி கிராமங்களையொட்டி வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அவ்வபோது காட்டுயானைகள் கிராமங்களுகுள் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள மா மரங்கள், நெற் பயிர்கள், வாழை மரங்களை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வருகிறது. மேலும், குண்டலபல்லியில் ஒற்றைக் காட்டு யாணை தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில், நேற்று குண்டலபல்லி கிராமத்தை சேர்ந்த தனியார் விவசாய நிலத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒற்றை காட்டு யானை புகுந்தது. மேலும், அங்குள்ள 30க்கும் மேற்பட்ட மா மரங்களின் கிளைகளையும் முறித்தும், அதில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 6.5 டன்னுக்கு மேலே உள்ள மாங்காய்களை சேதப்படுத்தி உள்ளது. மேலும், இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானை சேதப்படுத்திய நிலங்களை பார்வையிட்டு பின்பு நிலத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் பானங்கள் விட்டு வெடித்தனர்.

The post விவசாய நிலத்திற்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை அட்டகாசம் 6.5 டன் மாங்காய்கள் சேதம் பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பல்லியில் appeared first on Dinakaran.

Related Stories: