ஆலங்குடி, சித்திரக்குடி பகுதியில் ஒரு புறம் அறுவடை, மறுபுறம் நாற்று நடவு பணி மும்முரம்

வல்லம் : தஞ்சை அருகே ஆலக்குடி, சித்திரக்குடி பகுதியில் ஒரு புறம் அறுவடை பணிகளும், மறுபுறம் நாற்று பறித்து நடவு செய்யும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றால் அது தஞ்சை மாவட்டம்தான். இயற்கை இடர்பாடுகளால் எத்தனையோ வேதனைகள் ஏற்பட்டு இருந்தாலும் விவசாயியின் பாதமும், கரங்களும் வயலை என்றும் ஒதுக்கியதில்லை.தஞ்சை மாவட்டத்தில் 3 போகம் நெல் சாகுபடி நடக்கும். குறுவை, சம்பா, தாளடி தான் அவை. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். மேட்டூர் அணையில் உரிய அளவு தண்ணீர் இல்லாவிட்டால் தாமதமாக அணை திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் 12்ம் தேதி திறக்கப்பட்டது.மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவை முடிந்தது. சம்பா சாகுடி அறுவடைப்பணிகள் முடிந்து விவசாயிகள் தற்போது நெல்லை விற்பனை செய்யும் பணிகளில் மும்முரமாக உள்ளனர். இடையில் அடிக்கடி மழை பெய்து நெல் நனைந்து அதை காய வைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இதற்கிடையில் தஞ்சை அருகே ஆலக்குடி, சித்திரக்குடி பகுதிகளில் விவசாயிகள் தாளடி விதைப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர்.ஒரு சில விவசாயிகள் பாய் நாற்றங்கால் முறையில் சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். பல விவசாயிகள் நாற்று விட்டு சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். பல்வேறு இடங்களில் நாற்று விடும் பணிகளும், நாற்றை பறித்து நடவு செய்யும் பணிகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது….

The post ஆலங்குடி, சித்திரக்குடி பகுதியில் ஒரு புறம் அறுவடை, மறுபுறம் நாற்று நடவு பணி மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: