கரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற 259 பேர் மீது வழக்குப்பதிவு

கரூர்: கரூர் மாவட்டத்தில் ஜூன் 1ம் தேதி முதல் 30 ம்தேதி வரை அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக 259 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 87 டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணி வரை கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து, மதுபானங்களை மொத்தமாக வாங்கி மறைத்து வைத்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கும், அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசாருக்கும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வழக்கு பதிந்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஜூன் 1 ம்தேதி முதல் 30ம்தேதி வரை கரூர், சின்னதாராபுரம், க.பரமத்தி, லாலாப்பேட்டை, வாங்கல், வெங்கமேடு, பசுபதிபாளையம், தாந்தோணிமலை, சிந்தாமணிப்பட்டி, க.பரமத்தி, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், தென்னிலை, குளித்தலை, பாலவிடுதி மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றவர்கள் மீது வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் ஜூன் 1ம் தேதி முதல் 30ம்தேதி வரை மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 259 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 2,369 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுவிற்ற 259 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: