கல்லூரி விழிப்புணர்வு கருத்தரங்கம்

 

தேனி, ஜூலை 1: தேனி அருகே வடபுதுப்பட்டியில் தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சமூக வலைதள தினத்தையொட்டி சயின்ஸ் அண்டு ஹியுமானிட்டீஸ் துறையின் சார்பில் சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் தலைமை வகித்தனர். கல்லூரி இணை செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார்.இத்துறையின் ஒருங்கிணைப்பாளர் சித்ரா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம், துறைத் தலைவர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லூரி துணை முதல்வர் மாதவன், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் ரிச்சர்ட்பிரிட்டோ நன்றி கூறினார்.

The post கல்லூரி விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: