‘இங்கு எங்கேயும் கிடைக்கல சார்… ஆந்திராவுக்கு போய் வாங்கிட்டு வந்தேன்: பாக்கெட் சாராயத்துடன் போதை ஆசாமி ரவுசு

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுக்க, தமிழக அரசு உத்தரவின்பேரில், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில் கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மலைகளில் தொடர் ரோந்து சென்று சாராயம் காய்ச்சும் கும்பலை கைது செய்வதோடு, அடுப்புகளை அடித்து நொறுக்குகின்றனர். தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் எங்கும் சாராயம் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த காதர்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் போதை ஆசாமி ஒருவர் கள்ளச்சாராய பாக்கெட்டை கையில் தூக்கி பிடித்தபடி போதையில் நடுரோட்டில் அலப்பறை செய்ததோடு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார். இதைப்பார்த்த சிலர் அவர் கள்ளச்சாராய பாக்கெட்டை கையில் தூக்கி பிடித்திருப்பதை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.

உடனே அந்த ஆசாமியை பிடித்து, சாராயம் வாங்கிய இடத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். போலீசார் விசாரணையில் போதை ஆசாமி வாணியம்பாடி கோனாமேடு அடுத்த பரமேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த அன்புமணி (50), கூலித்தொழிலாளி என தெரியவந்தது. அவரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்தபோது, கள்ளச்சாராயம் இங்கு கிடைக்காததால், ஆந்திராவுக்கு சென்று ஆர்மணிபெண்டா கிராமத்தில் வாங்கி குடித்துவிட்டு, ஒரு பாக்கெட்டை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

The post ‘இங்கு எங்கேயும் கிடைக்கல சார்… ஆந்திராவுக்கு போய் வாங்கிட்டு வந்தேன்: பாக்கெட் சாராயத்துடன் போதை ஆசாமி ரவுசு appeared first on Dinakaran.

Related Stories: