ஃபிட்னெஸ்-சித்தி இத்னானி

நன்றி குங்குமம் டாக்டர்

கிராண்ட் ஹாலி என்ற குஜராத்தி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் சித்தி இத்னானி. தென்னிந்திய படங்களில் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து… தமிழில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளரார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் தற்போது, ஆர்யாவுக்கு ஜோடியாக காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்திலும், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 100 கோடி வானவில் என்கிற படத்திலும் நடித்துள்ளார். மேலும் சில தமிழ்ப் பட இயக்குனர்கள் இவரிடம் கதை கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.

சித்தி இத்னானி, மும்பை கல்லூரியில் மாஸ் மீடியா பட்டம் பெற்றவர். கல்லூரியில் படிக்கும்போதே, மாடலிங் துறையில் வாய்ப்புக்கிட்ட, மாடலானார்.  2014-இல் மும்பையில் நடந்த க்ளின் அன்ட் க்ளியர் பியூட்டி கான்டஸ்ட்டில் கலந்து ப்ரஷ்ஷான முகம் என்ற டைட்டிலை வென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, 2017 -இல், மிஸ் டிஜிபிசி வெஸ்ட் -2017 என்ற பட்டத்தையும், 2018 -இல் மிஸ் இந்தியா சூப்பர் டெலன்ட் பட்டத்தையும் வென்றுள்ளார். சித்தி இத்னானி, தனது பிட்னெஸ் ரகசியம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

எனது தந்தை, அசோக் இத்னானி பின்னணி குரல் பயிற்சியாளராக இருக்கிறார். எனது அம்மா ஃபால்குனி தாவே தொலைக்காட்சி நடிகையாவார். எனவே, எனது சிறுவயதுமுதலே எனக்கும் திரையுலகிற்கும் தொடர்பு உண்டு. நான் திரையுலகிற்கு வருவதற்கு முன்பு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக பல மேடை நாடகங்களில் நடித்துள்ளேன். சிறுவயது முதலே திரைத்துறை சார்ந்து இருந்ததால், டான்ஸ், பாட்டு என எல்லா வகைகளிலும் பயிற்சி எடுத்துக் கொண்டேன். கதக் நான் மிகவும் நடனக்கலையாகும்.

வொர்க்கவுட்ஸ்:

எனது பெற்றோர் திரைத்துறை சார்ந்தவர்கள் என்பதால், எங்கள் வீட்டில் உடற்பயிற்சி பழக்கம் உண்டு. எனவே, எனது சிறுவயதுமுதலே உடற்பயிற்சி செய்யும் பழக்கமும் தினசரி பழக்கங்களில் ஒன்றாகவே இருந்தது. ஒவ்வொருவருக்கும் பிட்னெஸ் மிக முக்கியமானது. தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பிட்னெஸ் உதவுகிறது. அதிலும், கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு பிட்னெஸ் மிகமிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதனால், என்னை பிட்டாக வைத்துக் கொள்வதில் நான் மிகவும் கவனமாக இருப்பேன். எவ்வளவு கடினமான ஓர்க்கவுட்டாக இருந்தாலும், அதை ஒரு வெறியாக எடுத்துக் கொண்டு முயற்சிப்பேன்.

அந்தவகையில், தினமும் ஜிம்முக்கு போய் சுமார் 2 மணி நேரம் ஓர்க்கவுட் செய்கிறேன். இதில், கார்டியோ எக்சர்சைஸ், ஃப்ளோர் எக்சர்சைஸ், ஸ்ட்ரென்த் எக்சர்சைஸ் நிச்சயமாக இருக்கும். இதைத் தவிர, டிரக்கிங் போவது, சைக்கிளிங் செய்வது ரொம்ப பிடிக்கும். அவ்வப்போது அதற்கான நேரத்தையும் ஒதுக்குகிறேன்.

டயட்: என்னை பொருத்தவரை, டயட்டில் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. வெளியூர் படப்பிடிப்புக்குச் செல்லும்போது வெஜிடேரியன், நான்வெஜிடேரியன், என என்ன கிடைக்கிறதோ அவற்றை எடுத்துக் கொள்வேன். என்னுடைய ஃபேவரைட் உணவு, பட்டர் சிக்கன் மற்றும் பிரியாணி. அதுபோன்று தென்னிந்திய உணவுகள் எல்லாம் பிடிக்கும்.

அதிலும் குறிப்பாக, காலை உணவாக மசாலா தோசை சாப்பிடுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும். சாட் அயிட்டங்களில், பானிபூரி , மக்கானா போன்றவை பிடிக்கும். பிடித்ததை சாப்பிடுவதில் எந்தத் தடையும் கிடையாது. கூடுமானவரை உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்வேன் அவ்வளவுதான்.

என்னைப் பொருத்தவரை அழகுக்கு எந்தவித வரையறையும் கிடையாது. பிட்டாக இருப்பதும் ஆரோக்கியமாக இருப்பதும்தான் முக்கியம். அதுதான் உண்மையான அழகு என்று நினைக்கிறேன்.

ப்யூட்டி: எனது பியூட்டிஷியன் ஆலோசனைப்படி நேச்சுரல் அழகு சாதனப் பொருள்களையே பெரும்பாலும் பயன்படுத்துகிறேன். அதுபோன்று, முகத்துக்கும், தேங்காய் எண்ணெய், பப்பாளி, கற்றாழை, வாழைப்பழம், வெள்ளரிச்சாறு, தேன், தயிர் போன்றவற்றையே பயன்படுத்துகிறேன்.

சூட்டிங் ஸ்பாட்டில் அதிகநேரம் இருப்பதால், வெயிலில் ஸ்கின் டேனிங் ஆகாமல் இருக்க, ஸ்ன்ஸ்க்ரீன் பயன்படுத்துவேன். அதுபோன்று பியூட்டி பொருள்களில் அதிகம் பயன்படுத்துவது மாய்ச்சுரைசர்தான். அது ஸ்கன்னை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. வெளியில் செல்லும்போது, பெரிதாக மேக்கப் எதுவும் செய்துகொள்ளாமல், ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து செல்வது ரொம்ப பிடிக்கும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post ஃபிட்னெஸ்-சித்தி இத்னானி appeared first on Dinakaran.

Related Stories: