சேலம் பெரியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் இருந்து பாமக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

சேலம்: சேலம் பெரியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் இருந்து பாமக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். பாமக எம்.எல்.ஏ.க்களுக்கு எந்தவித மரியாதையும் தராமல் அவமதித்துவிட்டதாக எம்.எல்.ஏ.க்கள் அருள் மற்றும் சதாசிவம் ஆகியோர் வெளியேறினர்.

சேலம் பெரியார் பல்கலைகழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா என்பது த்ற்போது நடைபெற்று கொண்டிருகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்து, கோவையில் இருந்து சேலம் பெரியார் பல்கலை.க்கு கார் மூலமாக வந்தார். அப்போது தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி உடனடியாக இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், தற்போது இந்த விழாவில் பங்கேற்க வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான அருள் மற்றும் சதாசிவம் ஆகிய இருவரும் தற்போது விழாவை புறக்கணித்த வெளியேறினர்.

இந்த பெரியார் பல்கலைகழகம் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ளது. அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அருள். பெரியார் பல்கலை.யில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அருள் உள்பட சட்டமன்ற உறுப்பினர்கள்யாறுக்கும் அழைப்பிதல் செல்லவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர் விழாவில் பங்கேற்க வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு உரிய மரியாதை தரபடவில்லை என கூறப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அருள் இந்த பெரியார் பல்கலைகழகத்தில் செனட் உறுப்பினராக உள்ளார். அவருக்கு உரிய மரியாதை தரபடாத காரணத்தால் இந்த விழாவில் இருந்து திடீரென வெளியேறினர்.

The post சேலம் பெரியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் இருந்து பாமக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Related Stories: